Breaking News

7 நாட்களில் எளிதாகவும், வேகமாகவும் உடல் எடை குறைக்க இதப் பன்னுங்க!

உடல் எடையை குறைக்க ஏகப்பட்ட பிரயத்தனங்கள் எடுத்தும் குறைக்க முடியாமலிருக்கும் நேரத்தில் 7 நாட்களில் 7 கிலோ குறைக்கலாம் என்று ஒரு கதை வைரலாய் பரவி வருகிறது.

முதல் நாள் : பழங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். வாழைப்பழத்தைத் தவிர மற்ற பழங்களை உட்கொள்ளலாம்.

இரண்டாம் நாள் : முழுவதும் காய்கறிகள். இதனை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடலாம். உருளைக்கிழங்கை காலையில் மட்டும் எடுத்துக் கொள்ளலாம்

மூன்றாம் நாள் : காய்கள் மற்றும் பழங்களை கலந்து சாப்பிடலாம். ஆனால் வாழைப்பழம் மற்றும் உருளைக்கிழங்கை தவிர்த்திட வேண்டும்.

நான்காம் நாள் : ஆறு முதல் எட்டு வாழைப்பழங்கள், மூன்று கிளாஸ் கொழுப்பு நீக்கப்பட்ட பால் எடுக்க வேண்டும்.

ஐந்தாம் நாள் : 250 கிராம் அசைவத்தை எடுத்துக் கொள்ளவேண்டும்.சைவம் உட்கொள்கிறவர்கள் கறிக்கு பதிலாக சீஸ் அல்லது பழுப்பு அரிசி சாதம் சாப்பிட வேண்டும். இவற்றோடு ஆறு தக்காளி பழங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அசைவ உணவு சாப்பிடுபவர்கள் கூடுதலாக இரண்டு கிளாஸ் தண்ணீரை அருந்த வேண்டும்

ஆறாம் நாள் : 250 கிராம் அசைவத்துடன் உருளைக்கிழங்கை தவிர மற்ற காய்களை எடுக்க வேண்டும். சைவம் சாப்பிடுவர்கள் சீஸ் அல்லது பழுப்பு அரிசி சாதம் சாப்பிட வேண்டும். ஆறாம் நாளும் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஏழாம் நாள் : பழுப்பு அரிசி சாதம்,பழம்,பழச்சாறு,காய்கறி என கலந்து சாப்பிடலாம்.

No comments