Breaking News

சவூதியில் சட்ட விரோதமாக தங்கி சிக்கினால் 6 மாதம் சிறை! 50 000 றியால்கள் அபராதம்! - அதிகம் பகிருங்கள்


சட்ட விரோத தங்கியிருப்பவர்கள் சிக்கினால் 6 மாதம் சிறை, 50000 றியால்கள் அபராதம் பின்னர் நாடு கடத்தப்படுவார்கள் என்பதாக General Directorate of Passports ஐ  ஆதாரம் காட்டி உள்ளூர்  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 சட்ட விரோதமாக தங்கி முதலாம் முறையாக சிக்குபவர்களுக்கு 10000 றியால்கள் அபராதமும் விதிக்கப்பட்டு பின்னர் நாடு கடத்தப்படுவர். இரண்டாவது முறையாக சிக்கினால் 25000 றியால்கள் அபராதமும், ஒரு மாத சிறை தண்டனை வழங்கப்பட்டு நாடு கடத்தப்படுவர். மூன்றாவது முறையாக சிக்கினால் 50000 றியால்கள் அபராதமும், 6 மாத சிறை தண்டனையும் வழங்கப்பட்டு பின்னர் நாடு கடத்தப்படுவார்கள் என்பதாக மதீனா தினசரிப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

சவூதி அரேபியா அண்மையில் “A nation without violators” என்ற தொனியில் புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்கள் 90 நாட்கள் பொது மன்னிப்பின் கீழ் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அந்த பொது மண்ணிப்பு 30 மேலும் நீடிக்கப்பட்டு கடந்த திங்கட்கிழமை (23-07-2017) நிறைவுக்கு வந்தமை குறிப்பித்தக்கது. பொதுமன்னிப்பின் கீழ் 6 இலட்சம் பேர் வரை சவூதியை விட்டு வெளியேறியுள்ளதாக உத்தியோப பூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன. 

உள்துறை மற்றும் தொழிலாளர் அமைச்சகங்கள் செய்திகளின் படி சட்ட விரோதமாக தங்கி இருப்பவர்களை கைது செய்வதற்காக நடவடிக்கைகள் படிப்படியாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக  சவூதி செய்திகள் தெரிவிக்கின்றன. 


ஆங்கிலத்தில் - Arabnews
தமிழில் - உண்மையின் பக்கம்

No comments