Breaking News

அபுதாபியில் பிறந்த உள்ளங்கை சைஸ் ஆண் குழந்தை ( படங்கள் ) - எடை 582 கிராம்கள் மட்டுமே.



பொதுவாக ஆரோக்கியமான கர்ப்பகாலம் என்பது 40 வாரங்களாகும். இவற்றில் சில குழந்தைகள் 40 வாரங்களுக்கு முன்பே குறைமாத குழந்தைகளாக பிறந்துவிடும். இந்தக் குழந்தைகளை நவீன மருத்துவம் சிறப்பு கவனம் செலுத்தி பாதுகாத்து பிழைக்க வைப்பதும் நடைமுறை மருத்துவ இயல்பே.

அபுதாபியில் வசிக்கும் ஒரு பிலிப்பைனிய தம்பதியருக்கும் இப்படித்தான் 40 வாரங்களில் பிறக்க வேண்டிய குழந்தை வெறும் 25 வாரங்களிலேயே அதுவும் நுரையீரல் முழு வளர்ச்சியுறாத நிலையிலேயே பிறந்தது. பிறக்கும் போது வெறும் உள்ளங்கை சைஸ் அளவே இருந்த இந்த ஆண் குழந்தையின் எடை 580 கிராம்கள் மட்டுமே. இத்தகைய குறைபாடுடைய குழந்தைகள் பிழைப்பது 50 முதல் 60 சதவிகிதம் வரை கடினமே.

அபுதாபியில் செயல்படும் தனியார் மருத்துவமனை ஒன்று இந்த குறைமாத குழந்தையின் மீது சிறப்பு கவனம் செலுத்தி சுமார் 102 நாட்கள் அதாவது 39 வாரங்கள் பூர்த்தியாகும் வரை பாதுகாத்து வந்ததன் விளைவாக குழந்தையின் வளர்ச்சியும் நுரையீரலும் போதியளவு வளர்ந்து தற்போது 1880 கிராம் என்ற எடை அளவை எட்டியதை தொடர்ந்து தாயும் சேயும் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இதற்கு முன் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 450 கிராம் எடையில் பிறந்த ஒரு பெண் குழந்தையே அமீரகத்தில் பிறந்த குழந்தைகளிலேயே மிக எடை குறைந்த குழந்தை என பதிவாகியுள்ளது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments