Wednesday, 26 July 2017

500கிலோ எகிப்துப் பெண்ணின் நிறை தற்போது 242கிலோ! மும்பை வைத்தியர் சாதனை!

பல ஆண்டுகளாக எழ முடியாமல் படுத்த 500 கிலோ எடையாக இருந்த உலகின் அதிக உடல்பருமன் கொண்ட பெண்ணின் எடை 242 கிலோவாக குறைக்கப்பட்டு சாதனை!
எகிப்தைச் சேர்ந்த இமான் அகமதுவுக்கு இரண்டரை மாதங்களுக்கு முன் மும்பையில் உள்ள சைஃபி மருத்துவமனையில் முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், அமீரகத்தில் உள்ள அபுதாபி புர்ஜில் மருத்துமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
மும்பையிலிருந்து புறப்படும்போது இமானின் எடை 
அபுதாபி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையால், மிகவும் எடை குறைந்துவிட்டார்.

இப்போதுள்ள 242 கிலோ எடை மேலும் 100 கிலோவாக குறைக்கப்படும் என மருத்துவர்கள் உறுதியளித்துள்ளனர்.

Author: verified_user

0 comments: