Wednesday, 5 July 2017

சவூதி அரேபியாவில் வெயில் அகோரம்! சில பகுதிகளில் 50 பாகையைத் தாண்டியது! இந்நிலை தொடரும் என அறிவிப்பு

இன்று முதல்(04-07-2017) எதிர்வாரம் உட்பட சவூதியின் கிழக்கு மாகாண பகுதியில் வெப்ப நிலை 50 பாகையைத் தாண்டிக் காணப்படும் என்பதாக வளிமண்டளவில் திணைக்களம் அறிவித்துள்ளது.

அது மட்டுமில்லாமல் நாட்டின் பல பகுதியில் வெப்பநிலையானது மிகவும் அதிகரித்துக் காணப்படும் என்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. கிழக்கு, மேற்கு மாகாணங்கள் அதிகம் இந்த வெப்பத்தால் பாதிக்கப்படும் என்பதாக தெரிகிறது. 

மக்கா மற்றும் மதீனா உட்பட றியாத் மற்றும் காஸ்ஸிம் நகர தெற்கு பகுதிகளிலும் இந்த கடுமையான வெப்பம் காணப்படுவதோடு புழுதிக் காற்றும் வீசக் கூடும் என்பதாக அறிவித்துள்ளது. 

இந்த  வெப்ப நிலையைக் கருத்திக் கொண்டு தான் சவூதி அரசாங்கம் காலை 11.30 மணி தொடக்கம் 3.00 மணி வரையில் திறந்த வெளியில் வேலை செய்வதை தடை செய்துள்ளது என்பது குறிப்பித் தக்கது.
ஆங்கிலத்தில் - www.arabews.com
தமிழில் - உண்மையின் பக்கம்

Author: verified_user

0 comments: