Friday, 14 July 2017

குவைத்திலிருந்து கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2557 பேர் இலங்கை, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்


அடையாளப்படம்
குவைத்திலிருந்து இந்திய இலங்கை உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீட்டு தொழிலாளர்கள் மட்டும் 2557 பேர் கடந்த மூன்று ஆண்டுகளில் நாடுகடத்தப்பட்டனர் என்று குவைத் தொழிலாளர் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.


இதில் விசா காலாவதியாகியும் குவைத்தில் தங்கியிருந்த நபர்கள் மற்றும் Sponsor (அரபியிடம்) இருந்து சட்டத்திற்கு புறம்பான வெளியறி நபர்கள் அடங்குவர் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் துவக்கம் முதல் இது வரையில் வீட்டு தொழிலாளர்கள் பற்றி 788 புகார்கள் கிடைத்துள்ளதாக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதில் Sponsor (அரபியிகள்) தொழிலாளர்கள் மேல் பதிவு செய்த புகார்கள் மற்றும் தொழிலாளர்கள் Sponsor மேல் பதிவு செய்த புகார்களும் அடங்கும்.

குவைத்தில் ஆறு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சம்மந்தப்பட்ட வேலை செய்யும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர் இதில் அதிகமான நபர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் தகவல்.

Reporting by: Kuwait tamil pasanga
Note: புகைப்படம் செய்தி பதிவுக்காக மட்டுமே

Author: verified_user

0 comments: