Monday, 24 July 2017

2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு கணவன், மனைவி தற்கொலை!

இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள கணவன் மற்றும் மனைவியின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடங்கனேனி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (32). இவர் மனைவி உமா தேவி (28) இவர்களுக்கு இபிலினா (3) கீர்த்தி (1) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
மீண்டும் கர்ப்பம் அடைந்த உமாதேவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பிரகாஷ் வீட்டில் இருந்து நீண்ட நேரமாக குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.
இதையடுத்து பக்கத்து வீட்டில் இருந்த பிரகாஷின் தந்தை கணேஷ் அங்கு சென்று என்னவென்று பார்த்தார்.
அப்போது வாயில் நுரை தள்ளியபடி பிரகாஷ் மற்றும் உமாதேவி சடலமாக கிடந்துள்ளனர்.
இபிலினா, கீர்த்தி ஆகிய இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணேஷ் மயங்கி கிடந்த 2 குழந்தைகளையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
செல்லும் வழியிலேயே கீர்த்தி பரிதாபமாக இறந்தாள். இபிலினாவுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் இரவு பிரகாஷ் மற்றும் உமா தேவி ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக இருவரும் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பொலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள்

Author: verified_user

0 comments: