Breaking News

இலங்கையில் அதிகம் பார்க்கப்படும் 25 இணையத் தளங்களில் 3 ஆபாச இணைய தளங்கள்!

உலகளவில் இணையத்தளங்களை வரிசைப் படுத்தும் நிறுவனமான அலெக்சா நிறுவனத்தின் தரப்படுத்தலின் படி அதிகம் இலங்கையில் பாவிக்கப்படும் இணையத்தளங்களில் முதல் 25 இடங்களில் 3 ஆபாச இணையத்தளங்கள் இடம்பிடித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி தரப்படுத்தலின் படி www.google.lk தளம் முதல் இடத்தையும், https://yts.ag என்ற இணையத்தளம் 25ம் இடத்தையும் பிடித்துள்ளது. 

1-25 இடத்தைப் பிடித்துள்ள இணையத்தளங்களை கீழ்வரும் படங்களில் காணலாம்.  அந்த மூன்று இணையத்தளங்கள் எவை என்ற ஆர்வத்தில் அன்பர்கள் தேடுவார்கள் என்ற நோக்கத்தில் அந்த 3 தளங்கள் Blur  செய்யப்பட்டுள்ளது. பெரியார்கள் முதல் சிறியோர்கள் வரை இணையப் பாவனை அதிகரித்துள்ளமை, மொபைடேட்டா குறைந்த விலையில் கிடைக்கின்றமை, மற்றும் ஆபாச இணையங்கள் அரசாங்கத்தால் தடை செய்யப்படாமை போன்ற முக்கிய காரணங்களாகும். 


No comments