Wednesday, 26 July 2017

19 நாடுகளை காரில் சுற்றிய இந்தியத் தம்பதி! சுவாரஷ்ய அனுபவப் பகிர்வு

2011-ம் ஆண்டு அவர் லண்டனில் இருந்து விமானத்தில் மனைவியுடன் மும்பைக்கு திரும்பி யிருக்கிறார். பயணத்தின்போது ஜன்னல் வழியே இயற்கையை ரசித்து பார்த்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது நீண்ட நேரம் விமானம் மலை பிரதேசங்களின் மீது பறந்து கொண்டிருந்திருக்கிறது. அதை கவனித்தவருக்கு மலைப்பிரதேசங்கள் வழியாக சாலை மார்க்கமாகவே பயணிக்கலாம் என்ற எண்ணம் உதித் திருக்கிறது. அதுபற்றி மனைவியிடம் கூறியிருக்கிறார். அவரோ, ‘சாலை மார்க்கமாகவே அவ்வளவு தொலைவு எப்படி பயணிக்க முடியும்?’ என்று கணவரை கேள்வி எழுப்பியிருக் கிறார். பிரயாண பிரியரான பத்ரி சாலை மார்க்க பயணம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? என்று பயண திட்டத்தை அலசி ஆராய்ந்திருக்கிறார். அது அவருக்கு சாதகமாகவே அமைந்திருக் கிறது.

லண்டனுக்கு காரிலேயே ஒருமுறை சென்றுவிட வேண்டும் என்று முடிவெடுத்தவர், அதற்கு செயல்வடிவம் கொடுக்க தொடங்கி இருக் கிறார். அதற்கு முன்னோட்டமாக மும்பையில் இருந்து காரிலேயே பத்ரிநாத்துக்கு பேத்தி நிஷிவுடன் புறப்பட்டிருக்கிறார். அங்கு சென்றடைய 46 மணி நேரம் தொடர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்திருக்கிறது. எனினும் பயண சாகசம் அவருக்கு பிடித்தமானது என்பதால் உற்சாகத்தோடு சென்று திரும்பி வந்திருக்கிறார். அது லண்டன் பயணத்திற்கு அடித்தளம் அமைத்து கொடுத்திருக்கிறது.

பத்ரி மும்பையில் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். தனது 64 வயது மனைவி புஷ்பா, 10 வயது பேத்தி நிஷிவுடன் கடந்த மே மாதம் காரில் லண்டன் பயணத்தை தொடங்கி இருக்கிறார். மணிப்பூர் மாநிலம் இம்பால் வழியாக முதலில் மியான்மரை சென்றடைந்திருக்கிறார்கள். அங்கிருந்து தாய்லாந்து, சீனா, ரஷியா வழியாக பயணம் தொடர்ந்திருக்கிறது. சீனாவை சென்றடைந்தபோது இறுக்கமான மனநிலையில் இருந்திருக்கிறார்கள். பாதுகாப்பு பற்றிய கவலையும் ஏற்பட்டிருக்கிறது.

“சீனா, ரஷியாவை சேர்ந்த மக்கள் கடுமையானவர்கள். வெளியாட்களை வரவேற்க ஆர்வம் காட்டமாட்டார்கள் என்றுதான் நாங்கள் கருதினோம். ஆனால் எல்லா இடங் களிலும் எங்களுக்கு உற்சாகமான வரவேற்பு கொடுத்தார்கள்” என்கிறார் பத்ரி.

தினமும் சராசரியாக 12 மணி நேரம் கார் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். அதே வேளையில் தினமும் 400 கிலோ மீட்டரை கடப்பது அவர்களுடைய இலக்காக இருந்திருக்கிறது. இடைப்பட்ட நேரங்களில் அந்தந்த நாட்டின் முக்கிய பகுதிகளுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார்கள். ஒரே ஒரு நாளில் மட்டும் 930 கிலோ மீட்டர் இடைவிடாமல் கார் பயணத்தை தொடர்ந்திருக்கிறார்கள். அந்த நாளில் மட்டும் மூன்று நாடுகளை கடந்திருக்கிறார்கள்.

“நாங்கள் அன்று காலை போலந்தில் உள்ள வார்ஷாவில் காலை உணவை சாப்பிட்டோம். மதிய உணவை ஜெர்மனி நாட்டில் உள்ள கோலோன் நகரிலும், இரவு உணவை பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரிலும் சாப்பிட்டோம். சீனாவில் சாலை கட்டமைப்புகள் சிறப்பாக இருக்கிறது. பெரும்பாலான சாலைகள் மலைப்பகுதி வழியாக பயணிப்பதாக அமைந்திருக்கிறது. அங்குள்ள கிராமப்புற பகுதிகளில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம்” என்கிறார் புஷ்பா.

ஒருசில நாடுகளில் இரவு பயணத்தின்போது ஓட்டலில் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் சிரமப்பட்டிருக்கிறார்கள். லண்டன் செல்வதை குறிக்கோளாக கொண்டிருந்தாலும் நாடு கடந்து நிறைய இடங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் பூரிப்பு பத்ரி-புஷ்பா தம்பதியரிடம் வெளிப்படுகிறது.

மும்பையில் இருந்து லண்டனுக்கு சாலை மார்க்கமாக காரிலேயே 22,200 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு 72 நாட்களில் சென்றடைந்திருக்கிறது ஒரு முதிய தம்பதி. செல்லும் வழியில் 19 நாடுகளையும் சுற்றிப் பார்த்திருக்கிறார்கள். அந்த தம்பதியின் பெயர் பத்ரி பால்டா-புஷ்பா. 73 வயதான பத்ரி தொலைதூர பயணங்களில் ஆர்வம் மிக்கவர். 

Author: verified_user

0 comments: