Breaking News

கத்தாருக்கு வழங்கப்பட்ட 10 நாள் அவகாசம் மேலும் 2 நாட்களால் அதிகரிக்கப்பட்டது!

கத்தாருடனான தொடர்பை துண்டித்த சவூதி, அமீரகம், பஹ்ரைன் மற்றும் எகிப்து போன்ற நாடுகள் தாங்கள் மீண்டும் தொடர்பை ஏற்பட்டுத்த வேண்டுமாயின் 10 நாட்களுக்குள் 13 நிபந்தனைகளை கத்தார் நிறைவேற்ற வேண்டும் என்று கால அவகாசம் கொடுத்து இருந்தன. அந்த அவகாசம் கடந்த நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் மேலும் 48 மணி நேரங்களுக்குள் அதாவது 2 நாட்களுக்கும் 13 நிபந்தனைகளை நிறைவேற்ற அவசாகம் வழங்கப்பட்டுள்ளதாக அரப் நியூஸ் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 

ஆனால் எந்த நிபந்தனையையும் தாங்கள் நிறைவேற்றத் தயார் இல்லை என்பதாக கத்தார் ஏற்கனவே அறிவித்துள்மை குறிப்பிடத்தக்கது. கத்தார்- அரபு நாடுகள் விவகாரம் உலக அளவில் பேசு பொருளாக மாறிள்ள  நிலையில் கத்தார் வாழ் வெளிநாட்டவர்கள் மத்தியில் என்ன நடக்குமோ என்ற ஒரு மன நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆங்கிலத்தில் - Arabnews.com
தமிழில் - உண்மையின் பக்கம்

No comments