ஞானசார தேரரை கைது செய்யாமல் தடுக்கும் அரசாங்கத்தின் பெரிய புள்ளி இவர் தான் விஜயதாச ராஜபக்ச (Video)

Published On Friday, 2 June 2017 | 21:06:00

ஞானசார தேரரை கைது செய்யவிடாமல் அழுத்தம் கொடுக்கும் அந்த பிரபலம் வேறு யாரும் அல்ல நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவே என கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை 7 நாடு­களின் தூது­வர்­களும் இரா­ஜ­தந்­தி­ரி­களும் கொழும்பு தெவட்­ட­கஹ பள்­ளி­வா­ச­லுக்கு விஜ­ய­மொன்­றினை மேட்கொண்டிருந்தனர். இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அசாத் சாலி இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அணியினரே ஞானசார தேரரின் பின்னால் ஒரு பலம் பொருந்திய சக்தியாக இருந்து அவர்களை இயக்குகினார். ஆனால் இப்போது நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவே ஞானசார தேரரை கைது செய்யவிடாமல் பாதுகாத்து வருகின்றார்.
ஜனாதிபதியுடனான சந்திப்புகளுக்கும் ஞானசார தேரரை அழைத்து செல்வது அமைச்சர் விஜயதாச ராஜபக்சவே, கடந்த ஆட்சியின் போது கட்டவிழ்த்துவிடபட்பட இனவாத அடக்குமுறைகள் காரணமாகவே நாட்டின் அனைத்துத் தரப்பினரும் இணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருந்ததாகவும் தற்போதைய மைத்ரி – ரணில் அரசாங்கமும் முஸ்லீம் மக்களை ஏமாற்றியுள்ளதுடன் சிங்கள இனவாதிகளுக்கு மீண்டும் களமைத்துக் கொடுத்து வேடிக்கை பார்த்துக்கொடிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved