பேசிக் கொண்டிருந்த போது ஐ-போன் வெடித்து இளைஞர் படுகாயமடைந்த சோகச் சம்பவம்!

Published On Saturday, 3 June 2017 | 05:17:00

திருவாரூர் அருகே ஐ-போனில் இளைஞர் ஒருவர் பேசிக்கொண்டிருந்த போது, போன் வெடித்து அவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அரியலூர் மாவட்டம் நகர் பகுதிக்குட்பட்ட பெரியார் நகரை சேர்ந்த சச்சின் என்பவர், எம்.ஏ பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர், திருவாரூர் அருகே புள்ளமங்கலம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் குணசேகரன் வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்தபோது, முகந்தனூர் என்ற இடத்தில் தனது உயரக ஆப்பிள் ஐ-போனில் பேசியுள்ளார்.

அப்போது, எதிர்பாரவிதமாக செல்போன் வெடித்து சிதறியுள்ளது. இதில் சச்சினுக்கு முகம், தாடை மற்றும் கைகளில் கடுமையான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து சச்சினை திருவாரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved