Breaking News

மருத்துவம் படிக்க பங்களாதேஷ் சென்ற இலங்கை யுவதிக்கு நேர்ந்த அவலம்!

சிட்டாங்கில் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பிரிவில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுகிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிட்டாங் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குல்ஷி பிரதேசத்தில் வணிக நிறுவனம் ஒன்றில் விற்பனை நிர்வாகியாக செயற்படும் 26 வயதுடைய Md Arif என்ற இளைஞர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக சிட்டாங் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு ஹோட்டல் ஒன்றில் Arif என்ற இளைஞரால் தான் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக திங்கட்கிழமை பாதிக்கப்பட்ட பெண் குல்ஷி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், Arif என்ற இளைஞர் Panchagarh என்ற பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
அத்துடன் கடந்த ஜுன் மாதம் 11ஆம் திகதி அந்த பெண்ணை தொலைபேசி ஊடாக அறிந்து கொண்ட அந்த இளைஞர், அன்று முதல் தொலைபேசி மூலம் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஞாயிற்று கிழமை இரவு குறித்த பெண் தங்கியிருக்கும் விடுதிக்கு அடுத்து உள்ள ஹோட்டலுக்கு வருமாறு Arif அந்த பெண்ணை அழைத்துள்ளார்.
அந்த பெண் Arif என்பவரை சந்திக்க சென்றுள்ளார். இதன் போது Arif அந்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் முறைப்பாட்டிற்கமைய திங்கள் பிற்பகல் Arifயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை இன்று பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ள நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சிட்டாங் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

No comments