கிளிநொச்சியில் கருத்தரங்கு எனக்கூறி மாணவியை அழைத்துச் சென்ற ஆசிரியர் கைது

Published On Saturday, 3 June 2017 | 15:12:00

கிளிநொச்சி கண்டாவளைக் கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவியை கருத்தரங்கு எனக்கூறி அப்பாடசாலையில் கணித பாடம் கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் தனது மோட்டர் சைக்கிளில் ஏற்றிச் சென்றமையால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறித்த மாணவிக்கு மட்டும் செயலமர்வு உள்ளது என அழைத்து சென்றுள்ளதுடன், ஆசிரியருக்கு பல தடவைகள் தொடர்பை ஏற்படுத்திய போதும் மாணவி கருத்தரங்கில் இருப்பதனால் சிறிது நேரத்தில் அழைப்பை ஏற்படுத்துங்கள என ஆசிரியரால் கூறப்பட்டுள்ளது.
இதனால் மாணவியுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் மாணவியின் சகோதரனால் முறைப்பாடு செய்யப்பட்டதனை அடுத்து, சில மணிநேரத்துக்குள் மாணவியும் ஆசிரியரும் விஸ்வமடு பிரதேசத்தில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவி கிளிநொச்சி சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் தர்மபுரம் போலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளளார்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved