மண்சரிவில் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குக்கு சென்ற குடும்பத்தினருக்கு நேர்ந்த சோகம்

Published On Thursday, 1 June 2017 | 18:09:00

ஹெலியகொட மண்சரிவில் உயிரிழந்தவரின் ஏழாம் நாள் கிரிகைக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்களின் கார் 60 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 6 வயது சிறுவன் பலியானதுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கொழும்பு ஹட்டன் பிரதான வீதியின் கினிகத்தேன நகரை அன்மித்த பகுதியிலே இன்று அதிகாலை 1.30 மணியளவில் இவ் விபத்து சம்பவித்துள்ளது. 

கினிகத்தேனை அம்பகமுவ சிங்கள வித்தியாலயத்தில் தரம் 1 கல்வி பயிலும் பத்தின் தேவேந்திர பண்டார சேனாரத்ன என்ற சிறுவனே ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த குறித்த சிறுவனின் தாய் தந்தை மற்றும் பாட்டி ஆகியோர் காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர். 

காயமுற்ற பாட்டி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய  தாய் தந்தை ஆகியோர் கினிகத்தேன வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பலியான சிறுவனின் சடலம் பிரேத பரிசோதணைக்கு நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved