Tuesday, 20 June 2017

கூட்டு இராணுவ பயிற்ச்சிகளுக்காக தனது படைகளை கத்தாருக்கு அனுப்பி வைத்தது துருக்கி அரசு...!

தீவிரவாதிகளுக்கு கத்தார் ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டி அந்த நாட்டுடன் சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 நாடுகள் தூதரக உறவை துண்டித்துள்ளது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் துருக்கி அரசு கத்தார் அரசுக்கு ஆதரவாக இராணுவ கூட்டுப்பயிற்ச்சிக்காக முதல் தொகுதியாக தனது துருப்புக்களை தலைநகர் தோஹாவுக்கு அனுப்பிவைத்துள்ளது.

மேலும் கத்தார் அரசின் மீதான தடைகளுக்குப் பிறகு பலவேறு விதமான உதவிகள் மற்றும் ஆதரவுகளை துருக்கி அரசு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Mohamed Hasil)

Author: verified_user

0 comments: