திருகோணமலையில் ஜும்ஆ பள்ளி வாசல் மீது பெற்றோல் குண்டு தாக்குதல். (படங்கள் இணைப்பு)

Published On Saturday, 3 June 2017 | 15:07:00

(அப்துல்சலாம் யாசீம்-) திருகோணமலை பெரியகடை ஜூம்ஆ பள்ளி வாயல் மீது இன்று அதிகாலை (03) இனந்தெரியாத நபர்களினால் பெற்றோல் குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

நோன்பை நோற்றுவிட்டு தொழுகைக்காக பள்ளி வாயலுக்கு சென்ற பிரதேச மக்கள் பள்ளி வாசல் மீது தீ வைக்கப்பட்டுள்ளதாக நேரில் கண்டதையடுத்து பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119 அழைப்பு
விடுத்து தெரியப்படுத்தியதாகவும் தெரியவருகின்றது.

பெற்றோல் நிரப்பப்பட்ட நான்கு போத்தல்கள் காணப்படுவதாகவும் பள்ளி வாசலின் காபட் மற்றும் பாய்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் இடத்திற்கு விரைந்த துறைமுக பொலிஸார் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் மூவின மக்களும் இன ஜக்கியத்துடன் வாழ்ந்து வரும் காலகட்டத்தில் மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தும் விதத்தில் செயற்பட்டு வரும் தீய சக்திகளினால் இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் மக்கள் ஒற்றுமையுடன் தொடர்ந்தும் வாழ வேண்டுமெனவும் அப்பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர்.

பள்ளி வாசலுக்கு தீ வைத்தமை தொடர்பாக பொலிஸ் குழுக்கள் மூலமாக தீவிர விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved