Breaking News

பாகிஸ்தானின் ஆதரவு சவூதி அரேபியாவுக்கா? கத்தாருக்கா? மன்னன் சல்மானின் கேள்வியும், நவாஸ் ஷரீபின் பதிலும்.

அரபு நாடுகளில் அதிக எரிவாயு வளம் கொண்ட நாடுகளில் கத்தார் நாடும் ஒன்று. இந்த நாட்டுடன் அரபு நாடுகளான சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, அமீரகம், ஏமன் ஆகிய 5 நாடுகள் தூதரக உறவை துண்டிப்பதாக அறிவித்தன. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு கத்தார் மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக இந்த நாடுகள் குற்றம்
சுமத்தியுள்ளது.

தூதரக உறவு துண்டிக்கப்பட்டதால் அந்த நாடுகள் கத்தாருடன் தங்களது விமான சேவைகள் மற்றும் கப்பல் சேவைகளையும் ரத்து செய்தது.
இவ்விவகாரத்தில் துருக்கி மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகள் கத்தாருக்கு ஆதரவாக உள்ளன. இந்நிலையில் உங்களுடைய ஆதரவு யாருக்கு என பாகிஸ்தானிடம் சவுதி அரேபியா கேள்வி எழுப்பி உள்ளது.
கத்தார் விவகாரத்தில் ராஜதந்திர ரீதியிலான தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்பாக சவுதி அரேபியா சென்று உள்ளார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப். அப்போது சவுதி அரேபியா அரசர் சல்மானை நவாஸ் செரீப் சந்தித்து பேசிஉள்ளார்.
இருநாட்டு தலைவர்கள் இடையிலான சந்திப்பின் போது, நீங்கள் எங்களுடன் உள்ளீர்களா அல்லது கத்தாருடன் உள்ளீர்களா? என நவாஸ் செரீப்பிடம் சவுதி அரேபியா அரசர் சல்மான் கேள்வி எழுப்பியதாக பாகிஸ்தான் மீடியாவான எக்ஸ்பிர்ஸ் டிரிபியூன் செய்தி வெளியிட்டு உள்ளது. பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துங்கள் என நவாஸ் செரீப் கூறியதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

No comments