Breaking News

கத்தார் மீது அரபு நாடுகள் விதித்த தடை பாரிய தோல்வி முடிந்துள்ளது - கத்தார் பிரபல பத்திரிகை ஆசிரியர்

கட்டார் மீது மூன்று அரபுநாடுகள் விதித்துள்ள தடை தோல்வியடைந்துள்ள அதேவேளை, கட்டார் மீது எந்த பாதகமான தாக்கத்தையும் அது ஏற்படுத்தவில்லை என அந்நாட்டின் பெனின்சுலா பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கலாநிதி காலித் முபாரக் அல் ஷாபி தெரிவித்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் கட்டார் மீது விதித்த தடை அந்த நாடுகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார் .

தொலைக்காட்ச்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்
இவ்வாறான நெருக்கடியான நிலைகளை எதிர் கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைளையும் கட்டார் அரசு நீண்ட நாட்களுக்கு முன்பே மேற்கொண்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இந்த நிலைமை தொடர்பில் கட்டார் எந்த ஒரு நாட்டிலோ அல்லது அமைப்பிலோ தங்கி நிற்பதில்லை என தெரிவித்த அவர், ஐக்கிய நாடுகள் சபையிடமோ தங்கிநிற்பதில்லை என தெரிவித்தார். பலஸ்தீன் பிரச்சினை போன்ற ஏனைய பிரச்சினைகளுக்கு இந்த அமைப்புகள் மூலம் இன்னும் தீர்வு காணப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“உண்மையில், இந்த தடையின் எந்தவிதமான விளைவுகளையும் நாம் உணரவில்லை, அது ஊடகப் பிரச்சாரங்களில் மட்டுமே காணப்படுகின்றது.” என கலாநிதி காலித் முபாரக் அல் ஷாபி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments