ஊருக்குள் புகுந்து நான்கு பேரை கொன்ற யானை : தமிழ் நாட்டில் கொடூரம்

Published On Saturday, 3 June 2017 | 05:24:00

சென்னை, கோவையில் நேற்று (02-06-2017) அதிகாலை ஊருக்குள் புகுந்த காட்டு யானை 4 பேரை மிதித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நகரை அண்மித்த போத்தனூர், வெள்ளலூர் கோவைப்புதூர், மதுக்கரை பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. 
இன்று அதிகாலை போத்தனூர் அருகே ஊருக்குள் புகுந்தது காட்டு யானை, கணேசபுரம் மூராண்டம்மன் கோவில் வீதியில் உள்ளது தனது வீட்டின் முன்பகுதியில் உறங்கிக்கொண்டிருந்த  விஜயகுமார்(வயது 38) மற்றும் அவரது மகள் காயத்ரி (12) ஆகியோரை தாக்கி கொலை செய்துள்ளது.
 பின்னர் பிரதேச மக்கள் ஒன்று திரண்டு யானையை காட்டுக்குள் விரட்ட முயன்றனர். அதற்குள் யானை அங்கிருந்து ஓடி  சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் வெள்ளளூருக்கு சென்றது. 
சுமார் ஐந்து மணியளவில் வெள்ளளூர் பஜனை கோவில் வீதியைச் சேர்ந்த இரு பெண்களை யானை தாக்கியதில் பெண் ஒருவர் பலியானார்.
சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். இவர்கள் வேல், கம்புகளுடன் யானையை காட்டுக்குள் விரட்ட முயன்றனர். இதனால் ஆவேசமடைந்த யானை பொது மக்களை விரட்டத் தொடங்கியது. இதில் கீழே விழுந்து அப்பகுதியை சேர்ந்த 5 பேர் படுகாயமடைந்தனர். 
இதற்கிடையே யானை வெள்ளலூர் வெள்ளபாளையம் பகுதிக்கு சென்றது. அங்கு  பழனிசாமியை (73)என்பவரை தூக்கி வீசியது. இதில் அவரும் பலியானார்.
காட்டு யானையின் ஆக்ரோசத்தை அடக்கி அதன்பின்னர் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். 
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved