Breaking News

கத்தாரில் நோன்புப் பெருநாள் விடுமுறை தினங்கள் பற்றிய உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியானது!


எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு விடுமுறை தினங்களை் பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது கத்தார் அரசாங்கம். அந்த வகையில் அமைச்சகங்கள், அரச நிறுவனங்கள், மற்றும் பொது நிறுவனங்கள ஆகியவற்றுக்கான விடுறை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(25-06-2017) ஆரம்பமாகி அடுத்த மாதம் 03-07-2017 வரை வரை தொடரும் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச அதிகாரிகள் 04-07-2017ம் ஆண்டு தங்களது பணிகளை மீளத் ஆரம்பப்பிப்பார்கள்..
மேலும் கத்தார் மத்திய வங்கி மற்றும், கத்தார் மத்திய வங்கியின் கீழ் இயங்கும் நிதி நிறுவனங்களுக்கான ஆரம்ப மற்றும் இறுதி விடுமுறை நாட்கள் பற்றிய அறிவித்தலை மத்திய வங்கி ஆளுனர் தீர்மானிப்பார் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை பொருநாள் தினம் மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் இரண்டு நாட்கள், மொத்தம் 3 நாட்கள் வழங்கப்படும். அந்த வகையில் 25ம் திகதி பெருநாளாக இருந்தால் 25, 26, 27 ஆகிய தினங்கள் விடுமுறையாக இருக்கும் என்பதாக கத்தார் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆங்கிலத்தில் - thepeninsulaqatar.com தமிழில் உண்மையின் பக்கம்

No comments