பாக்கு சாப்பிடுபவர்களா நீங்கள்.. உங்களுக்கு எச்சரிக்கை செய்தி இதோ!

Published On Saturday, 3 June 2017 | 05:13:00

ஈரோடு மாவட்டத்தில் பாக்கு குடோன்களில் உள்ள பாக்குகளில் கலப்படம் செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து பல குடோன்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்தியூர் பகுதிகளில் பாக்கு குடோன்கள் அதிகளவு உள்ளன. பாக்குக்கு இனிப்பான சுவையை அதிகரிப்பதற்காக பல ரசாயண பொருட்கள் கலந்து வருகின்றனர்.


இது தொடர்பாக ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கலப்படம் கலக்கும் குடோன்களில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பாக்குடன் காரியம் உடைய வேதி பொருட்கள் கலக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இந்த பாக்கை சாப்பிடுபவர்களுக்கு பல வகையான உடல் உபாதைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஏற்கெனவே மேகி நூடுல்ஸில் பல வகையான வேதிப்பொருட்கள் இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved