Breaking News

தொடர்ந்து பற்றி எரிந்து கொண்டு இருந்த சென்னை சில்க் கட்டிடம் இடிந்து விழுந்தது.

சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் ஒரு பகுதி முழுவதுமாக இடிந்துவிழுந்துள்ளது.
நேற்று அதிகாலை 4 மணிக்கு இந்த தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 24-மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
முன்னதாக எந்நேரமும் கட்டிடம் இடிந்து விழலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கட்டிடத்தின் 4வது தளத்தில் உள்ள முன்பக்க சுவர் முழுவதுமாக முன்னர் இடிந்து விழுந்தது.
தீ அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால், விரைவில் தீயை அணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கட்டிடத்தின் அபாய நிலை கருதி யாரும் அருகில் செல்ல வேண்டாம் என எற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கட்டிடத்தில் 7-வது தடம் முதல் 2-வது தடம் வரை தரைமட்டமாகியுள்ளன. இன்று காலை 03.19 மணி அளவில் பயங்கர சத்ததுடன் கட்டிடம் இடிந்து விழுந்ததுள்ளதால், அருகில் உள்ள மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர்.
மேலும் தீயில் கருகி வரும் சென்னை சில்க்ஸால் தீயணைப்பு படை வீரர்கள் அருகில் செல்ல முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கட்டிடம் முழுதுமாக இடிந்து விழுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments