இன்றும் பல பகுதிகளில் அடைமழை! அனர்த்த நிலையம் அறிவிப்பு

Published On Friday, 2 June 2017 | 14:49:00

இலங்கையின் பல பிரதேசங்களில் இன்றும் அடைமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
மேல், தெற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணத்தில் இன்று முதல் மழை அதிகரிக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை தொடர்பில் தாம் அதிக அவதானத்துடன் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மூன்று மணித்தியாலத்திற்கு ஒரு தடவை பிரதேசங்களில் தகவல்களை பெற்று கொண்டு அதற்கமைய மக்களை வெளியேற்றுவதற்கு அல்லது பொருத்தமான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடும் மழை காரணமாக நீர் நிரம்பிய களனி மற்றும் நில்வளா கங்கையின் நீர் மட்டம் தற்போது பொதுவாக மட்டத்திற்கு வந்துள்ளதாக நீர்ப்பாசன துறை திணைக்களம் நேற்று தெரிவித்துள்ளது.
களு மற்றும் ஜின் கங்கையின் சில பிரதேசங்களில் மாத்திரம் ஓரளவு நீர் குறைந்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை வளிமண்டலவியல் திணைக்களம் அல்லது வேறு ஆற்றல்மிக்க நிறுவனங்களினால் வெளியிடப்படும் அனர்த்த எச்சரிக்கையை மக்கள் கருத்தில் எடுத்து செயற்பட வேண்டும்.
அனர்த்த எச்சரிக்கைக்கு அமைய மக்கள் இடம்பெயர்ந்தால் பாதிப்புக்களை குறைத்து கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
கடந்த கால அறிக்கைகளை ஆராய்ந்து பார்க்கும் போது அந்த விடயம் உறுதியாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved