குவைத்தின் ஆடியா பகுதியில் இலங்கையர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்

Published On Thursday, 1 June 2017 | 12:59:00

குவைத்தில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குவைத்தின் ஆடியா பிரதேசத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அரப் டைம்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

உள்விவகார அமைச்சிற்கு கிடைத்த தொலைபேசி தகவலுக்கமைய குறித்த இடத்திற்கு சென்ற பாதுகாப்புத் தரப்பினர் கழுத்தில் சுருக்கிட்ட தற்கொலை செய்துகொண்ட இலங்கையரின் உடலை
மீட்டுள்ளனர்.

தற்கொலை செய்து கொண்ட நபரின் விபரங்களை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved