Breaking News

கத்தாரின் மனிதபிமானம்- அமீரகத்துக்கு அனுப்பும் எரிவாயுவைத் தடுக்கும் எண்ணமில்லை!

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கத்தர் தினசரி கொடுக்கும் 2 பில்லியன் கியூபிக் அடி இயற்கை எரிவாயுவை நிறுத்தும் எண்ணம் இல்லை என கத்தர் பெட்ரோலியம் தலைமை அதிகாரி சஅத் ஷெரிதா அல் காபி அறிவித்துள்ளார்.

கத்தர் மீது அநியாயமாக தொடுக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைக்கு எதிராக, கத்தரிலிருந்து அமீரகத்துக்குச் செல்லும் எரிவாயு குழாயினை மூட எங்களால் முடியும். ஆனால் அது எங்களின் சகோதரர்களான அமீரகத்துக்கும் அதன் மக்களுக்கும் தாங்கவொண்ணா துயரைக் கொடுக்கும். அதனை நாங்கள் செய்ய விரும்பவில்லை. எனவே, அமீரகத்துக்குக் கொடுத்து கொண்டிருக்கும் எரிவாயுவினை நாங்கள் நிறுத்தமாட்டோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(அப்துர் ரஹ்மான்)

No comments