மணக்கோலத்தில் பி.எட். தேர்வு எழுதிய மாணவி - இந்தியா நாமக்கல் மாவட்டத்தில் சம்பவம்!

Published On Saturday, 3 June 2017 | 05:21:00


நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றிய ஆசிரியர் கூட்டுறவு சிக்கன சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வருபவர் ஜெயராமன். இவருடைய மனைவி செல்வராணி. இவர்களது மகள் பொன்மதி (வயது 22). பி.ஏ. (ஆங்கிலம்) படித்துள்ள இவர் தற்போது ராசிபுரம் டவுன் சேந்தமங்கலம் பிரிவு ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்வியியல் கல்லூரியில் பி.எட். முதலாமாண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் பொன்மதிக்கும், பேளுக்குறிச்சி அருகே உள்ள தாண்டாக் கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகம்-தனலட்சுமி தம்பதியின் மகனான என்ஜினீயர் மணிகண்டனுக்கும் நேற்று காலை திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவி பொன்மதிக்கு பி.எட். தேர்வு தொடங்கியது.

தேர்வு எழுதினார்

நேற்று அவருக்கு ‘தற்காலிக இந்தியாவின் கல்வி‘ என்ற பாடத்துக்கான தேர்வு நடந்தது. எனவே, இந்த தேர்வை எழுத விரும்புவதாக மாப்பிள்ளை வீட்டாரிடம் அனுமதி கேட்டார். அவர்களும் அனுமதி அளித்ததால், ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் இருந்த தேர்வு மையத்துக்கு பொன்மதி மணக்கோலத்தில் காலை 10 மணிக்கு வந்தார்.

பின்னர் அவர் மணக்கோலத்திலேயே அந்த தேர்வை எழுதினார். இதை பார்த்த மையத்தில் இருந்த சக மாணவ-மாணவிகள் தேர்வு முடிந்தவுடன் பொன்மதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் தேர்வு மையத்துக்கு நேரில் வந்த புதுமாப்பிள்ளை மணிகண்டன் அவரை காரில் அழைத்துச்சென்றார்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved