ஒரு பெண்ணின் செயற்பாட்டால் முழு இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சவூதியின் போலிஸ் அதிகாரிகள்

Published On Thursday, 1 June 2017 | 14:38:00

சவூதி அரேபியாவில் தான் பணிபுரியும் வீட்டின் உரிமையாளர் தன்னிடமிருந்து சிறுநீரகம் கேட்பதாக குற்றம் சுமத்தியிருந்த தம்புள்ளை பகுதியை சேர்ந்த பெண் நேற்று நாடு திரும்பினார்.

இந்திரா காந்தி எனும் பெண் சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளால் மீட்கப்பட்டு இன்று இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இது தொடர்பான முறைப்பாட்டை அடுத்து இலங்கை தூதரக அதிகாரிகள் சவூதி பொலிஸாரின் உதவியுடன் இந்த விவகாரம் தொடர்பாக ஆராய்ந்த போது குறித்த பெண்ணுக்கு இலங்கைக்கு செல்லவேண்டும் என்பதால் இவ்வாறான போலியான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து, சவூதி அரசுக்கோ அல்லது மக்களுக்கு எதிராகவோ போலிக் குற்றச்சாட்டு மேற்கொண்டால் அதனை குற்றச்செயலாக கருதி 5 தொடக்கம் 20 வருடம் வரை சிறைத்தண்டனை பெற்றுத்தருவதாக இலங்கை அதிகாரிகளுக்கு சவூதி பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் 1 மில்லியன் சவூதி ரியல் தண்டப்பணத்துக்கு உட்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved