உலகில் மிகப் பெரிய விமானம் இது தான்! பிரமிப்பூட்டும் படங்கள் இணைப்பு

Published On Friday, 2 June 2017 | 19:23:00

உலகின் மிகப்பெரிய விமானம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
உலக புகழ் பெற்ற மைக்ரோ-சொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான போல் எலனினால் பெரிய விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரொக்கட்களை கொண்டு செல்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த விமானத்தில் 6 இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. விமானத்தின் இறக்கைகள் 358 அடி நீளத்தை கொண்டுள்ளது. குறித்த விமானம் கால்பந்து மைதானத்தை விடவும் பெரியதாகும்.
இந்த திட்டத்திற்கு 300 மில்லியன் டொலர் செலவாகும் என 2011ஆம் ஆண்டு கணிப்பிடப்பட்டிருந்து. போல் எலனின் aerospace நிறுவனமே இந்த விமானத்தை தயாரித்துள்ளது.
இம் விமானத்தில் கிட்டத்தட்ட 5 இலட்சம் ராத்தல் நிறையுடனான பொருட்களை கொண்டு செல்ல முடியும் என குறிப்பிடப்படுகின்றது.Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved