இந்த உருளைக்கிழங்கை சாப்பிடாதீங்க! மரணம் கூட நிகழலாம்!

Published On Saturday, 3 June 2017 | 19:12:00

உலகம் பயணிக்கும் வேகத்தில் நாம் அன்றாடம் விரும்பி உண்ணும் பல உணவுகளில் இருக்கும் தீமைகளை பற்றி அறிந்து கொள்வதில்லை.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கின் கெட்டு போன வகைகளில் நச்சு இருக்கும். இதன் தோலிலோ அல்லது உள்பக்கத்திலோ பச்சை நிறத்தில் இருந்தால் அதை சாப்பிடக்கூடாது.
சூரிய ஒளிபடும் இடங்களில் அதிக நேரம் இருப்பதால் பச்சைநிறத் திட்டுகள் உண்டாகின்றன.
கிளைகோல்கலாய்ட் (Glycoalkaloid) இருப்பதால், இது தீங்கான ஒன்றே. இதை சாப்பிடும் பட்சத்தில் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படும்.
நச்சுப்பொருட்கள் உள்ள முளை வந்த உருளைக்கிழங்குகளை சமைத்து சாப்பிடும்போது தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம், வயிற்றுவலி, டயரியா போன்றவை ஏற்படும்.
முதலில் பலவீனமாக இருக்கும். கோமா நிலையை அடைந்து அரிதாக சிலருக்கு மரணம் கூட ஏற்படும் அபாயம் உண்டு. கருவுற்ற தாய்மார்கள் கண்டிப்பாக இவற்றைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது.
முட்டை
வெள்ளை முட்டை மற்றும் மஞ்சள் கரு தனியாக இல்லாமலிருந்தால் நிச்சயம் அதை சாப்பிட கூடாது. அதன் நச்சு தன்மை உடலை பாதிக்கும்.
பிரட்
பூஞ்சை பிடித்து கெட்டு போன பிரட் துண்டுகளை சாப்பிட கூடாது. பூஞ்சை பிடித்த இடத்தை மட்டும் எடுத்து விட்டு மற்ற பகுதியை சாப்பிட்டால் அது உடலில் புற்றுநோய் செல்களை உருவாக்கும்.
பாப்கார்ன், ஓட்ஸ் போன்ற உணவுகளில் கெட்ட வாடை வந்தால் அதை சாப்பிடாமல் தூக்கி போட்டு விட வேண்டும். இல்லையேல் உடலுக்கு கேடு விளைவிக்கும்.
காரம், புளிப்பு போன்ற நல்ல சுவையான உணவுகள் வைத்திருக்கும் இடத்தை வாரம் ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். இந்த உணவுகள் எப்போது வேண்டுமானாலும் கெட்டு போகலாம்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved