Breaking News

நேற்றிரவு தராவீஹ் தொழுகையில் அழுதே விட்டேன்.. - ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஒரு நெகிழ்ச்சிச் சம்பவம்

(அடையாளப்படம்)
நேற்றிரவு தராவீஹுடைய வேளையில் 3 - 4 வயது நிரம்பிய அழகிய ஒரு அரபியின் மகன் . தந்தையின் அருகே, நிலத்தில் இருந்தவாறே தொழுகின்றார். விளையாட்டாக தொழுகின்றார் என்றே நினைத்தேன்.

வித்ருடைய தொழுகையும் முடிந்தது.

பின்னர்தான் அவரது காலில் பொருத்தப்பட்டிருந்த ஏதோ ஒரு வகையான கருவி தெரிந்தது . இருந்தும் அந்த பிஞ்சு குழந்தையால் நிற்க சக்தியில்லை . பிறவியில் கால் எலும்புகளில் ஏதேனும் ஒரு குறைபாடு என நினைக்கிறேன் .

தொழுகை முடிந்ததும் , தவழ்ந்தவாறே இமாமை நோக்கி சென்று முஸாபஹா செய்கையில் இமாமும் அவரை கட்டியணைக்கிறார்.

அனைவரது கண்களிலும் ஒருகணம் கண்ணீர். நானும் அழுதுவிட்டேன். தந்தை அவரை கைகளில் ஏந்தியவாறு மஸ்ஜிதை விட்டு வெளியேறினார். அந்த பிஞ்சு உள்ளத்திட்காக அதே கணத்தில் துஆவே செய்ய முடிந்தது .

நமது குழந்தைக்கு பிறவியில் சிறு குறை இருந்தாலும் பிறர் பார்த்து விடக்கூடாதென்று அவர்களுக்கு வெளியுலகைக் காட்ட வெட்கப்படும் சமூகத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம் .

அனைத்தையும் குறையின்றி தந்த அல்லாஹ்வை ஐவேளை பேணுதலாக தொழவே நம்மில் பலருக்கு நேரமில்லை. அனைத்தும் எம்மிடம் இருக்கும் போது அதன் பெறுமதி எமக்கு புரிவதில்லை. ஆரோக்கிய வாழ்வு ஒரு பெரும் செல்வம் .

உடல் திடகாத்திரமாக இருக்கும் போது இறைவனுக்கு நன்றி செலுத்த பயன்படுத்திக் கொள்ளுங்கள். இளமையை சீரழித்து விட்டு முதுமையில் படுத்த படுக்கையில் கண்ணீர் வடிப்பதில் பலனில்லை. உங்களது வாலிபத்தைப் பற்றி மறுமையில் கேட்கப்படும் . பதிலளிக்க நானும் நீங்களும் தாயாராகுவோம்...

- சஜாத் காசிம் - ( ஐக்கிய அரபு இராச்சியம்)
~~~ ரமழானில் ஒரு படிப்பினை ~~~

No comments