வெளிநாடுகளில் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் நட்டஈடு!

Published On Friday, 2 June 2017 | 05:08:00

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காகச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் ஆலோசனைக்கமைவாக, 2016ஆம் ஆண்டில் சேமநல நிதியின் மூலம் 2 கோடி 15 இலட்சம் ரூபாவை ஒதுக்கி அவர்களுக்கு நட்ட ஈடு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி, முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட 32 பேருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊழியர் சேமலாப நிதியில் இருந்து 65 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட நட்டஈடு நேற்று வழங்கப்பட்டது.
இதன்போதே அமைச்சர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பின் போது பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு இந்த வருடத்தில் ஒரு கோடி ரூபாவுக்கு மேற்பட்ட நட்டஈடு வழங்கப்படும் என குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் தங்களது பாதுகாப்பு தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தலதா அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved