Breaking News

சோடா குடிப்பது இவ்வளவு ஆபத்தா? தீமைகளை தெரிந்து கொள்ளுங்கள்

அனைவரும் விரும்பி குடிக்கும் சோடாவினால், எவ்வளவு ஆபத்தான நோய்கள் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? 
சோடா குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன?
  • சோடாவை தினமும் குடிப்பதால், இதய நோய்கள் மற்றும் உடல் பருமன் இரண்டு மடங்காக அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றது.
  • சோடாவில் உள்ள மூலப்பொருட்கள், நரம்பு மண்டலத்தின் வலிமையை விரைவில் இழக்கச் செய்து, நரம்புத் தளர்ச்சி உருவாகும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறது.
  • சோடா குடிப்பதால், ரத்த அழுத்த மாறுபாடு, உடலில் அதிக காற்றழுத்தத்தை உண்டாக்கி, தலைவலி, வயிற்றுவலி மற்றும் உடல்வலி போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.
  • முதுமையில் அல்சீமர் நோய்க்கு ஆளாக்கப்பட்டு, ஞாபக மறதி, மந்தத் தன்மை, வாய் குழறுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பை உண்டாக்குகிறது.
  • உடலில் அதிகப்படியாக செரடோனின் சுரப்பை தூண்டச் செய்து, ஒருவித ஹைபர் நிலை மற்றும் நிம்மதியற்ற நிலையை உருவாக்கிவிடும்.
சோடாவை மதுவுடன் கலந்து குடித்தால், சர்க்கரை நோய் ஏற்படும். அதுவே ஒரு நாளைக்கு 2 முறைக்கு மேல் சோடா குடித்தால், அது அடிக்கடி தலைசுற்றல், வாந்தி, மயக்கம், போன்ற பல பிரச்சனையை ஏற்படுத்தும்

No comments