குற்றச்சாட்டுக்கள் மற்றும் தடைகளை நீக்கும் வரை யாருடனும் சமரசப் பேச்சுக்குத் தயாரில்லை- கத்தார் திட்டவட்டம்

கத்தார் மீது அநியாயமாக விதிக்கப்பட்ட பொருளாதார மற்றும் போக்குவரத்துத் தடையினை முழுமையாக விலக்கிக் கொள்ளும்வரை எவ்வித பேச்சுவார்த்தைக்கும் தயாரில்லை என கத்தர் வெளியுறவு துறை அமைச்சர் முஹம்மது பின் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இதுவரை நடந்துள்ள சமரசப் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. கத்தர் மீது விதிக்கப்பட்ட பொருளாதார மற்றும் போக்குவரத்து முற்றுகை முழுமையாக நீக்கப்பட வேண்டும். அதுவே பேச்சுவார்த்தைகள் சரியான திசையில் செல்வதற்கான தொடக்கமாக அமையும். அதுவரை கத்தார் எவ்வித பேச்சுவார்த்தைக்கும் தயாரில்லை என அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.
இதற்கிடையில், கத்தார் மீதான முற்றுகை நீண்டு செல்வது சரியல்ல. இது ஆறாத காயத்தினை ஏற்படுத்தும் என கத்தர் ஏர்வேய்ஸ் தலைமை அதிகாரி அக்பர் அல் பாக்கர் கவலை தெரிவித்தார்.
ஆங்கிலத்தில் - www.thepaninsulaqatare.com
தமிழில் அப்துர் ரஹ்மான்

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget