Breaking News

சவூதியின் புதிய முடிக்குரிய இளவரசருக்கு கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானி வாழ்த்து!

(ஏற்கனவே எடுக்கப்பட்ட படம்)
சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசராக அந்நாட்டின் மன்னர் சல்மானினால் அவரது மகன் முஹம்மத் பின் சல்மான் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  அவருக்குத் தனது வாழ்த்தினை  கத்தார் அதிபர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி அவர்கள் அனுப்பி வைத்துள்ளதாக பெனின்சுலா இணையம் செய்தி வெளியிட்டுள்ளது

ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி நேரடியாக அனுப்பி வைத்துள்ள இச்செய்தியில் சகோதரத்துவமிக்க இரு நாட்டு உறவுகள் மேலும் வலுவடையவும் சவுதியின் முன்னேற்றத்துக்கும் உழைக்கும் வலுவான சக்தியாக உருவாக வேண்டும் என்பதாக தனது வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments