இறைவனிடம் மனைவி நற்கூலி பெற, சமைத்த உணவை 9 மாதங்கள் குளிரூட்டியில் வைத்த கணவன் (உண்மைச் சம்பவம்)

Published On Sunday, 4 June 2017 | 05:23:00

எகிப்து நாட்டைச் சேர்ந்த கலிபா என்பவரின் மனைவி ஈமான் படத்தில் காணப்படுகின்ற உணவை, தனது கணவனுக்கு சமைத்து வைத்ததன் பின்பு கார் விபத்தொன்றில் திடீர் மரணமடைந்துள்ளார்.

கலிபா தனது மனைவி சமைத்த உணவை பாதுகாப்பாக 9 மாதங்கள் குளிரூட்டியில் வைத்திருந்து, ரமழான் மாதம், முதல் நாள் அன்று மீண்டும் அவ்வுணவை சூடாக்கி சாப்பிட்டுள்ளார் .

இவர் அவ்வளவு காலமும் அவ்வுணவை பாதுகாத்து, முதல் நோன்பின் பிற்பாடு அதை சாப்பிட்டதற்கான காரணம், தனது அன்பு மனைவி சமைத்த இறுதி உணவு நோன்பாளிக்கு அளித்த உணவாக அமைந்து, அதற்குரிய நற்கூலியை இறைவனிடத்தில் அவள் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற உயரிய நோக்கிலாகும் என்று குறிப்பிட்டுள்ளார்..!
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved