சவூதியா விமானங்களில் 9 அயல்நாட்டு மொழிகளில் வீட்டுத் தொழிலாளர்கள் உரிமைகள் பற்றிய வீடியோ ஒளிப்பரப்பு!

Published On Thursday, 1 June 2017 | 14:15:00


சவூதி தொழிலாளர் நல அமைச்சகமும் சவுதி ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும் அரபி உட்பட 9 அயல்நாட்டு மொழிகளில் வீட்டுப்பணியாளர்களின் உரிமைகள் மற்றும் பணி குறித்த விபரங்களை வீடியோ காட்சிகளாக சவுதியா விமானங்களில் ஒளிபரப்ப கூட்டாக முடிவு செய்துள்ளன.

தொழிலாளர் ஒப்பந்தம், சம்பளம், பணி நேரம், பயிற்சி மற்றும் தகுதியை உயர்த்திக் கொள்ளல், பணி நிறைவு சம்பளம், விடுமுறை, தொழிலாளர் கமிட்டி குறித்த அனைத்து விபரங்களையும் வீட்டுப்பணியாளர்களின் விழிப்புணர்வுக்காக ஒளிபரப்பவுள்ளது.

அரபி, இங்கிலீஷ், பெங்காளி, தகலோக் (பிலிப்பைனி), உருது, இந்தோனேஷியன், மலாய், ஹிந்தி மற்றும் அம்ஹாரிக் (எத்தியோப்பியா) ஆகிய மொழிகளில் இந்த வீட்டுத் தொழிலாளர் உரிமைகள் மற்றும் வேலைச்சூழல்கள் குறித்து இந்த விளக்க விழிப்புணர்வு வீடியோ எடுத்துரைக்கும்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved