சவூதியில் விளம்பர நோட்டீஸ்களை விநியோகித்தால் இனி 500 ரியால் அபராதம் - புதிய சட்டம்

Published On Thursday, 1 June 2017 | 14:08:00


பொதுவாக அரபு நாடுகளில் வர்த்தக நிறுவனங்கள் தங்களுடைய வியாபாரம் மற்றும் விலைச் சலுகைகள் குறித்த துண்டு நோட்டீஸ்களை (Promotional Brochures) அனைத்து வீட்டு வாசல்கள் (Doorsteps) மற்றும் வரவேற்பு மண்டபத்திலும் (Building Receptions) விட்டுச் செல்வர், இன்னும் சிலர் சுவர்களில் ஒட்டியும், சிலர் தெருக்களில் நின்று விநியோகித்தும் வருவர்.

இந்த செயல்களால் சுற்றுப்புறச்சூழல் மாசடைவதாக கருதிய 'நகராட்சி மற்றும் கிராம அலுவல்களுக்கான அமைச்சகம்' (Ministry of Municipal & Rural Affairs) இத்தகைய செயல்களுக்கு தடைவிதித்துள்ளதுடன் 500 ரியால்கள் அபராதமும் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

மேற்சுட்டிய குற்றங்களை தனியார்கள், வர்த்தக நிறுவனங்கள், பெரிய வணிகக் குழுமங்கள், சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடைகள் என அனைவரும் செய்து வருவதாகவும், விளம்பர நோட்டீஸில் வெளியிடப்பட்டிருக்கும் தொடர்பு எண்களை கொண்டு குற்றமிழைப்பவர்களின் அபராத விபரங்கள் சவுதியர்களுடைய அடையாள (Saudi ID) அட்டை அல்லது தங்குமிட விசா அனுமதி (Iqamas - Residential Permits) விபரங்களுடன் இணைக்கப்படும் என அமைச்சகம் அறிவித்துள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved