Breaking News

36 பிள்ளைகளுக்கு தந்தையான பாகிஸ்தானைச் சேர்ந்த குல்ஸர்-கான் சிறப்பு நேர்காணல்.....!

குழந்தைப் பிறப்பு இயற்கையானது. அதை நாம் ஏன் தடுக்க வேண்டும்?" கேட்கிறார் 36 பிள்ளைகளுக்குத் தந்தையான 57 வயது குல்ஸர் கான். இவருக்கு மூன்று மனைவிகள்.

சரியான பொருளியல் சூழல் இல்லை; சமூகப் பாதுகாப்பு இல்லை; எப்படிப் பிள்ளைகளை வளர்க்கப் போகிறார்கள்? "அல்லாஹ் காப்பாற்றுவார்" என்பது இவர்களது பதில்.

பல்கிப் பெருகிவரும் பாகிஸ்தான் மக்கள்தொகைக்கு இவர்களைப் போன்றவர்கள் கணிசமான பங்களிக்கின்றனர்.  
பாகிஸ்தானின் மக்கள்தொகை கடந்த 19 ஆண்டுகளில் முதன்முறையாகக் கணக்கிடப்படுகிறது.

சராசரியாக ஒரு பெண்ணுக்கு 3 பிள்ளைகள் என்ற விகிதம் என்கின்றனர் அதிகாரிகள். வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்துவருகிறது. 
60 மில்லியன் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் மோசமான சூழலில் வசித்துவருகின்றனர்.

பாகிஸ்தான் சந்திக்கும் இந்த மிகப் பெரிய பிரச்சினை வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கிறது என்கிறது ஐக்கிய நாட்டு நிறுவன மக்கள்தொகை மன்றம்.

No comments