Breaking News

சவூதி அரேபியாவின் பொதுமன்னின் மூலம் இதுவரை 3500க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பினர்

சவூதி அரேபியாவினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்புக்காலத்தில் அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 3500க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கான விமான டிக்கட்கள் வழங்கப்பட்டுள்ளன என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த பொது மன்னிப்புக்காலப்பகுதியில் சட்டவிரோதமாக தங்கியருக்கும் வெளிநாட்டவர் சொந்த நாடுகளுக்கு திரும்பாவிட்டால் அவர்கள் எவ்வித பாராபட்சமுமின்றி கைது செய்யப்படுவதுடன் இனி பொது மன்னிப்புக்காலம் எக்காரணத்தைக் கொண்டும் வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் சவுதியில் பணியாற்றுபவர்களை தௌிவுபடுத்துமாறு பாகிஸ்தானுக்கான இலங்கை தூதரகம் அவர்களுடைய உறவினர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதேவேளை, குறிப்பிட்ட பொது மன்னிப்புக் காலத்தில் சொந்த நாடுகளுக்குத் திரும்புவோர் மீண்டும் சவுதிக்குள் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவர் என்று தூதுவர் அஸிம் தாஸிம் தெரிவித்திருந்தார்.

கடந்த மார்ச் மாதம் தொடக்கம் இம்மாதம் இறுதி வரையில் பொது மன்னிப்புக்காலம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments