ஷார்ஜா சாரதிகள் கவனத்திற்கு! முக்கிய சாலைகளில் 30 அதிநவீன ரேடார் கேமிராக்கள் கண்காணிப்பு !

Published On Thursday, 1 June 2017 | 14:48:00


ஷார்ஜாவில் போக்குவரத்து குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் பன்முக செயல்பாட்டுத் தன்மை வாய்ந்த 30 அதிநவீன கேமராக்களை ஷார்ஜா போலீஸ் முக்கிய சாலைகளில் புதிதாக பொருத்தியுள்ளது. இவை 3G தொழில்நுட்பத்தில் இயங்குபவை.

மலீஹா, ஷேக் முஹமது பின் ஜாயித் ரோடு, அல் எதிஹாத் ரோடு, எமிரேட்ஸ் ரோடு மற்றும் ஷார்ஜா – தைது ரோடு (Sharjah - Dhaid Road) ஆகியவற்றில் பொருத்தப்பட்டுள்ள இந்த கேமராக்கள் முன், பின் என இருபுறமும் செயல்படும் வல்லமை உடையவை. மேலும், ஒரே நேரத்தில் பலவித போக்குவரத்துக் குற்றங்களையும் படம்பிடிப்பதுடன் அவற்றை வீடியோ பதிவுகளாகவும் உடனுக்குடன் ஷார்ஜா போக்குவரத்துத் துறைக்கு அனுப்பும்.

அவற்றுடன் அதிவேகமாக செல்லும் வாகனங்கள், வரையறுக்கப்பட்ட வேகத்தை விட மெதுவாக செல்லும் வாகனங்கள், இரண்டு வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளி தராத வாகனங்கள், அனுமதிக்கப்படாத லேன்களில் செல்லும் கனரக வாகனங்கள், அனுமதி இல்லாத நேரத்தில் இயக்கப்படும் கனரக வாகனங்கள், முரட்டுத்தனமான முறையில் இயக்கப்படும் வாகனங்கள் என அனைத்தை கண்காணிக்கும்.

ஷார்ஜா போலீஸ் குறிப்பிட்டுள்ளபடி இந்த ரேடர் கேமராக்கள் ஒரே நேரத்தில் பல வாகனங்களையும், பல லேன்களை கண்காணிக்க கூடியவை. ஒரே நேரத்தில் நடக்கும் பலவகையான போக்குவரத்துக் குற்றங்களையும் வாகன வாரியாக போட்டோ ஆதாரத்துடன் தரம்பிரித்துக் தரவல்லவை. முன் பின் வாகனப் போக்குவரத்தை கண்காணிக்கக்கூடியவை, கடுமையான போக்குவரத்து நெரிசலின் போதும் துல்லியமாக செயல்படக்கூடியவை, வேகக்கட்டுப்பாட்டை ஒவ்வொரு வகை வாகன வகைக்கும் அனுமதிக்கப்பட்ட அளவில் பிரித்தறிய கூடியவை. வீடியோ பதிவுகளை நேரலை செய்யக்கூடியவை என பல சிறப்பம்சங்கள் உள்ளதாக கூறியுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved