Breaking News

சவூதியில் 24 வருடங்கள் தாயகம் செல்லாமல் சட்ட விரோதமாக பாலை வனத்தில் தங்கியிருந்த இந்தியர்!

சவூதி அரேபியாவில் 24 வருடங்கள் தாயகம் செல்லாமல் சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இவரது பெயர் ஞான பிரகாசம் ராஜமரியான். தற்போதைய வயது 52. 1994ம் ஆண்டு, சுமார் 24 வருடங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு வந்துள்ளார். சவூதியின் ஹய்ஸ் பகுதியில் மாதத்துக்கு 100 றியால்களுக்கு  வேலை பார்த்து வந்துள்ளார். 6 மாதங்களுக்கு பிறகு இவர் வேறு ஒரு அரபிக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளார். 

அங்கு இவருக்கு சரியான ஊதியம் கொடுக்கப்படாததால் அங்கிருந்து தப்பித்து ஹய்ல் நகரின் ஒதுக்குப் புறம் உள்ள ஒரு பாலைவனத்தில் வசிக்கத் தொடங்கியுள்ளார். 

இது தொடர்பாக ஞான பிரகாரசம் கருத்து தெரிவிக்கும் போது, ”நான் சவூதிக்கு வரும் போது எனது மகள்கள்  சிறிய பிள்ளைகள். தற்போது 24 வருடங்கள் கழித்து நாடு திரும்பிச் சென்று  பார்க்கும் போது எனது மகள்களின் பேரக்குழந்தைகள் அதே வயதில் இருக்கின்றன” என்றார்.

சமூக ஆர்வளர் ஒருவரின் உதவியினால் சவூதி அரேபியாவினால் அறிவிக்கப்பட்டு தற்போது அமூலில் உள்ள பொது மன்னிப்பினை பயன்படுத்தி தாயகமான தமிழ் நாட்டுக்குச் சென்றுள்ளதாக சவூதி கெஸ்ஸட் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆங்கிலத்தில் - சவூதி கெஸ்ஸட்
தமிழில் -  உண்மையின் பக்கம்


No comments