சவூதியில் 200 சிறைவாசிகளை விடுதலை செய்ய 15 மில்லியன் ரியால் நிதி திரட்டு!

Published On Saturday, 3 June 2017 | 22:05:00


சவுதியில் இப்புனிதமிகு ரமலானில் தனிப்பட்ட சில உரிமை மீறல் காரணங்களுக்காக  சிறைபட்டுள்ள சுமார் 200 சிறைவாசிகளை மீட்கும் நோக்குடன் சுமார் 15 மில்லியன் ரியாலை திரட்டியுள்ளது சவுதியில் தேசியளவில் செயல்படும் 'தரஹூம் கமிட்டி' (Tarahum Committee). கடந்த வருடம் இதுபோல் சுமார் 250 சிறைவாசிகளை விடுவித்துள்ளது தரஹும் கமிட்டி.

நீண்ட நாள் சிறையிலிருப்பவர்கள், நோயாளிகள், வயதானவர்களுக்கு முன்னுரிமை அளித்து விடுதலைக்கு உதவிகள் செய்யப்படுகின்றன. சிறைவாசிகள் செலுத்த வேண்டிய மொத்த தொகையில் சுமார் 40 முதல் 60 சதவிகிதம் வரை தள்ளுபடி செய்யும்படி எதிர்த்தரப்பினரிடம் கோரிக்கை வைக்கப்பட்டு மீதத்தொகை சிறைவாசிகளின் சார்பாக தரஹூம் செலுத்துகின்றது.

சிறை விடுதலைக்குப் பின் அவர்களின் குடும்பத்தாருடன் கலந்தாலோசிக்கும் தரஹூம் கமிட்டி, அவர்களுக்கான வருவாய், வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி, கல்வி மற்றும் விழிப்புணர்வு வழிகாட்டுதல்களையும் பொருளாதார உதவிகளையும் வழங்குகின்றன. இந்த உதவித் திட்டங்களை ரமலானுக்குப் பின்னும் தொடர்ந்து ஆண்டு முழுவதும் செயல்படுத்துகின்றது தரஹூம் கமிட்டி.

இதுபோன்ற நல்ல திட்டங்களை நாமும் முன்மாதிரியாக கொள்ளலாமே.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved