Breaking News

ஓமான் சென்ற இலங்கைப் பணிப்பெண்ணுக்கு 13 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைத்த அதிஷ்டம்! 36 இலட்சம்.

ஓமானில் 13 வருடங்களும் 9 மாதங்களும் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்த இலங்கை பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய சுமார் 36 லட்சம் ரூபா சம்பள பணத்தை மஸ்கட் நகரில் உள்ள இலங்கை தூதரகம் பெற்றுக்கொடுத்துள்ளது.
பாணந்துறை மொரவின்ன பிரதேசத்தை சேர்ந்த 60 வயதான நளினி பெர்னாண்டோ என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாருக்கு இந்த சம்பள பணம் கிடைத்துள்ளது.
இந்த பெண் கடந்த 2001ம் ஆண்டு முதல் ஓமானின் மஸ்கட் நகரில் இருந்து 300 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஜாலன் பானி என்ற பிரதேசத்தில் உள்ள ஓமான் பிரஜையின் வீட்டில் பணியாற்றி வந்துள்ளார்.
ஓமான் பிரஜை இலங்கை பணிப் பெண்ணை தனது வீட்டில் தங்க வைத்து விட்டு தனது மனைவி பிள்ளைகளுடன் வெளிநாடு சென்றுள்ளார்.
எனினும் வாக்குறுதி வழங்கியபடி இலங்கை பெண்ணுக்கு மாதாந்தம் சம்பளத்தை அவர் வழங்கவில்லை. இதனை தனது முகவர் மூலம் பெண் இலங்கை தூதரகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து கடந்த 2015ம் ஆண்டு ஓமான் பொலிஸார் ஊடாக பெண் இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த
பெண்ணுக்காக உடனடியாக தலையீடுகளை மேற்கொண்ட ஓமானுக்கான இலங்கை தூதுவர் எம்.கே. பத்மநாதன் மற்றும் தூதரக அதிகாரிகள், பெண்ணின் சம்பளத்தை பெற்றுக்கொள்வதற்காக ஓமான் பிரஜைக்கு எதிராக கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் அந்நாட்டு ஆரம்ப நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இலங்கை பெண்ணுக்கு இலவசமாக சட்ட உதவியும் வழங்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைகளில் சம்பளம் கொடுக்காததை ஓமான் பிரஜை ஒப்புக்கொண்டதுடன் அவருக்கு மூன்று மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்து.
வழக்கு விசாரணையின் இறுதி இலங்கை பெண்ணுக்கு 13 ஆண்டுகளுக்கு மேலாக செலுத்த வேண்டிய சம்பள பணத்தில் 30 லட்சத்தை முதலில் செலுத்த ஓமான் பிரஜை ஒப்புக்கொண்டுள்ளார்.
மீதமுள்ள நிலுவை பணத்தை இலங்கை தூதரகம் ஊடாக மாதாந்தம் 60 ஆயிரம் ரூபா வீதம் பெண்ணின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யவும் அவர் இணங்கியுள்ளார்.
பெண்ணின் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க இலங்கை தூதுவர் உட்பட தூதரக அதிகாரிகள் பெரும் பங்காற்றியுள்ளனர்.

No comments