Wednesday, 21 June 2017

சவூதியில் கடும் வெப்பம் - காலை 12:00 - 3:00 வரை திறந்த வெளியில் வேலை செய்யத் தடை!

கத்தார், அமீரகம், ஓமனில் நடைமுறைப்படுத்தப்படுவது போலவே சவுதியிலும் 3 மாதங்களுக்கான தினமும் 3 மணி நேர கட்டாய ஓய்வு நேரம் 15.06.2017 முதல் அமுலுக்கு வந்தது. இதன்படி தினமும் பகல் 12 முதல் மாலை 3 மணி வரை சூரியன் சுட்டெரிக்கும் திறந்த வெளிப்பகுதியில் வேலை செய்வதும், வேலை வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது. மீறுவோர் கடும் அபராதங்களை செலுத்த நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அவசரகால பணிகளுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது எனவும், இந்த சட்டம் ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை அமலில் இருக்கும் எனவும் சவுதியின் தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

Author: verified_user

0 comments: