பகலில் பள்ளி மாணவன்....இரவில் வாட்ச்மேன் வேலை: 12-ம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவன்

Published On Saturday, 3 June 2017 | 22:27:00

ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடும்ப வறுமை காரணமாக இரவில் வாட்ச்மேன் வேலை பார்த்துக்கொண்டே படித்த 12-ம் வகுப்பு மாணவன் 87% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடும்ப வறுமை காரணமாக இரவில் வாட்ச்மேன் வேலை பார்த்துக்கொண்டே படித்த 12-ம் வகுப்பு மாணவன் 87% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே உள்ள மொர்ஹாபாதி என்ற பகுதியில் வசிப்பவர் நிதிஷ் குமார். தந்தை இறந்து விட்ட காரணத்தால் வீட்டில் வறுமை தாண்டவமாடியுள்ளது. வறுமையிலும் தனது பள்ளிப்படிப்பை கைவிட அவர் முடிவுசெய்யவில்லை. பதிலாக, அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இரவு வாட்ச்மேனாக பணியில் சேர்ந்துள்ளார்.

பகலில் பள்ளியிலும், பள்ளி முடிந்த பின்னர் அடுக்குமாடி குடியிருப்பில் வாட்ச்மேனாகவும் தனது வாழ்க்கையை நிதிஷ் நடத்திவந்துள்ளார். அதே அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளிகளுக்கான சிறிய அறையில்தான் நிதிஷின் குடும்பம் வசித்து வந்தது. 

தேர்வு நாட்களில் இரவு நேரங்களில் கையில் புத்தகங்களுடன் காவல் பணியை மேற்கொண்டுள்ளார் நிதிஷ். இதன் பலனாக சமீபத்தில் வெளியான 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 87.60 சதவிகித மதிப்பெண்களுடன் அவர் தேர்ச்சி பெற்றுள்ளார். அம்மாநிலத்தின் மொத்த தேர்ச்சிவிகிதமே 57 சதவிகிதம் தான். மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களே 85 சதவிகித மதிப்பெண்களை எட்டியுள்ளனர்.

வெறும் தரையில் அமர்ந்து, விளக்கு வெளிச்சத்தில் படித்து இந்த சாதனையை பிடித்துள்ள நிதிஷ்-க்கு, ஐ.ஐ.டி-யில் பொறியியல் பயில வேண்டும் என்பதே விருப்பம். தற்போது, அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இருவர் நிதிஷின் பொறியியல் கனவுக்கு உதவும் விதமாக, ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வுக்கு தேவையான பயிற்சிகள் மற்றும் பண உதவிகள் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

தன்னுடைய மோசமான சூழ்நிலையிலும், மனம் தளராமல், குடும்ப பாரத்தையும் சுமந்து கொண்டு கல்வியில் சாதித்துள்ள நிதிஷ், அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved