Breaking News

ஆசிரியரால் தாக்கப்பட்ட 10 வயது மாணவன்! வைத்தியசாலையில் அனுமதி! நுரரெலியாவில் சம்பவம்!

10 வயது பாடசாலை மாணவர் ஒருவரை கடுமையாக தாக்கிய ஆசிரியர் தொடர்பில் நுவரெலியா பிரதேசத்தில் செய்தி ஒன்று பதிவாகியுள்ளது.
கந்தப்பளை பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் கல்விப் பயிலும் 10 வயது மாணவரையே குறித்த ஆசிரியர் தாக்கியுள்ளார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்,சிகிச்சைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குழுவாக விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களுக்கு இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் அந்த மாணவரில் ஒருவரை குறித்த ஆசிரியர் வயிற்றில் கடுமையாக தாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மற்றைய ஆசிரியரும்,குறித்த ஆசிரியரை விமர்சித்துள்ளளார் என பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.
சம்பவத்தை தொடர்ந்து ,பாதிக்கப்பட்ட மாணவர் சிறுநீர் கழிப்பதில் கடும் சிரமப்பட்டுள்ளார்.இந்த நிலையில் அவரை நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments