பெண்களே இது உங்களுக்கான எச்சரிக்கை: நாளை உங்களுக்கும் இது போல நடக்கலாம்!

Published On Monday, 29 May 2017 | 05:28:00

சமூக வலைத்தளங்களில் இருந்து இளம் பெண்களின் படங்களை ஆபாச இணையத்தளங்களில் பதிவேற்றி அந்த பெண்களின் தகவல்களை அந்த இணையத்தளங்களில் வெளியிட்டு அவர்களை விபச்சாரிகள் போல் குறிப்பிட்டு பணம் சம்பாதிக்கும் கும்பலொன்று செயற்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான குழுக்கள் இலங்கையிலும் செயற்படுவதாக தெரியவந்துள்ளது. குருநாகல் பகுதியில் இதுபோன்ற குழுவொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக இளம் பெண்களின் சமூக வலைத்தளங்களுக்குள் சென்று அவர்களின் புகைப்படம் வயது , வசிக்கும் இடம் ஆகியவற்றை எடுத்து ஆபாச இணையத்தளத்தில் வெளியிட்டு இவருடன் இரவுகளை கழிக்க பணத்தை குறிப்பிட்டு குறித்த கும்பல் பணம் சம்பாதிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன.

தொலைபேசி இலக்கமொன்றை குறிப்பிட்டு அதற்கு ஈசி கேஸ் மூலம் பணத்தை அனுப்பி வைக்குமாறும் அவ்வாறு செய்தாலே அந்த பெண் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியுமெனவும் குறிப்பிட்டு ஆண்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved