கண்டி பிலிமத்தலாவை தந்துர பகுதியில் சிறு பதட்டம் ! பிரதேசத்துக்கு பொலிஸார் விரைவு .

Published On Saturday, 27 May 2017 | 21:59:00

(MN) கண்டி பிலிமத்தலாவை , தந்துர பகுதியில் முஸ்லிம் இளைஞன் ஒருவன் முகநூலில் புத்தரை அவமதிக்கும் வகையில் பதிவிட்டதாக கூறப்படும் பதிவை தொடர்ந்து அங்கு நேற்று முதல் சிறு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

நேற்றிரவு பெருமான்மையினத்தவர்கள் முச்சக்கரவண்டிகளில் அப்பகுதிக்கு வந்து சென்றிருந்த நிலையில் இன்று நோன்பு துறக்கும் நேரத்தில் முனவத்துகொட பள்ளிவாசல் அருகில் பல சிங்கள இளைஞர்கள் கூடியதால் மீண்டும் பதட்ட நிலை அதிகரித்துள்ளது.இதன் போது ஆங்காங்கே கற்கள் வீசப்பட்டதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றன அதேவேளை வீடுகள் சிலவற்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் நாம் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் லாபிர் ஹாஜியார்  மற்றும் ஹிதாயத் சத்தார் ஆகியோரை தொடர்பு கொண்டு கேட்ட போது இது விடயமாக கேட்டபோது...

தாங்கள் இருவரும் மத்திய மாகான பிரதி பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு கொண்டுசென்றதாகவும் அதனைத் தொடர்ந்து அங்கு பொலிசார் விரைந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் ஹலீம் அவர்கள் நேற்று முதல் நேரடி கவனம் செலுத்திவருதாக அவர் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் பிரதேசத்தின் விகாரையில் இவ்விகாரத்தை சுமுகமாக முடித்துக் கொள்வது தொடர்பில் சாதகமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் அறியமுடிகிறது.

Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved