சார்ஜா நீதிமன்றத்தில் இலங்கை முக்கியஸ்தருக்கு சிறை தண்டனை? ஏன் தெரியுமா?

Published On Wednesday, 31 May 2017 | 18:04:00

நவலோக்க பொலிபெக் தொழிற்சாலையை உரிமையாக்கிக் கொள்வதற்காக போலி ஆவணங்கள் சமர்பித்துள்ளதாக சார்ஜா பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் பின்னர் உபாலி தர்மதாஸவுக்கு ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சார்ஜா நீதிமன்றத்தினால் இந்த சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அவரது உடல் நிலையை கருத்திற்கு கொண்டு, வைத்திய அறிக்கைக்கமைய அவரது சிறை தண்டனை மூன்று வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் இது தொடர்பில் உபாலி தர்மதாஸவிடம் வினவிய போது அவ்வாறான சம்பவங்கள் ஒன்றும் இடம்பெறவில்லை எனவும் அது போலியான செய்தி எனவும் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved